web
stats
View Visitor Stats 7-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள்…69 ஆண்டு சாதனையை முறியடித்தது புஜாரா- சஹா ஜோடி! – VethaTV
You are here
Home > விளையாட்டு > 7-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள்…69 ஆண்டு சாதனையை முறியடித்தது புஜாரா- சஹா ஜோடி!

7-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள்…69 ஆண்டு சாதனையை முறியடித்தது புஜாரா- சஹா ஜோடி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 7-வது விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்து 69 ஆண்டுகால சாதனையை முறியடித்தது புஜாரா- சஹா ஜோடி.

ராஞ்சி: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 7-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்து 69 ஆண்டு கால சாதனையை புஜாரா- சஹா ஜோடி முயற்டித்து சாதித்துள்ளது. ராஞ்சியில் ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் இடையேயான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 451 ரன்களைக் குவித்தது.

பின்னர் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 603 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. புஜாரா- சஹா ஜோடி அபாரமாக ஆடியது. புஜாரா 202 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். சஹா 117 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 199 ரன்களைக் குவித்தது. முன்னர் அடிலெய்டுவில் கடந்த 1948-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விஜய் ஹசாரே, ஹேமு அதிகாரி ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 132 ரன்கள் குவித்ததே இதுவரையிலான சாதனையாக இருந்தது. தற்போது 7-வது விக்கெட்டுக்கு 199 ரன்களைக் குவித்து என்ற 69 ஆண்டுகால சாதனையை புஜாரா- சஹா ஜோடி முறியடித்துள்ளது.

admin
பொது செய்திகள்,சினிமா செய்திகள்,கல்வி செய்திகள், பேட்டிகள்,மக்கள் குறைகள், என சமுதாயத்தை நோக்கிய உங்கள் சேவைகளுக்காக இந்த நிறுவனம்.
http://www.vethatv.com
Top