web
stats
View Visitor Stats உலக செய்திகள் – VethaTV
You are here
Home > உலக செய்திகள்

காஷ்மீர் சோதனை சாவடியில் ராணுவம் – போலீஸ் இடையே மோதல், போலீஸ் வழக்குப்பதிவு

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளால் தூண்டிவிடப்படும் கல் வீச்சாளர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். மாநிலத்தில் அமைதியின்மை அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ராணுவம் மற்றும் போலீஸ் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் சோதனை சாவடியில் ராணுவம் மற்றும் அம்மாநில போலீஸ் இடையே இன்று மோதல் வெடித்து உள்ளது. இருதரப்பு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்து உள்ளது. இதில்

மத்தியபிரதேசம் செல்லும் வழியில் ராகுல், போக்குவரத்து விதியை மீறினாரா?

ஜெய்ப்பூர், மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தின்போது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியான விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில், மத்திய பிரதேசம் செல்லும் வழியில் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி நேற்று ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு தனி விமானத்தில் வந்திறங்கினார். அங்கிருந்து சாலை மார்க்கமாக மத்திய பிரதேச எல்லைக்கு சென்றார். இந்த பயணத்தின் இடையே அவர் ஒருவரது மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து

அந்தமான் கடற்பகுதியில் 116 பேருடன் சென்ற மியான்மர் ராணுவ அந்தமான் கடற்பகுதியில் 116 பேருடன் சென்ற மியான்மர் ராணுவ விமானத்தின் உடைந்த பாகங்கள், சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

யாங்கூன், இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில், ராணுவ விமானம் ஒன்று இந்திய நேரப்படி நேற்று மதியம் 2 மணி அளவில் தெற்கு கடலோர பகுதி நகரான மெய்க்கில் இருந்து மியான்மரின் மிகப்பெரிய நகரான யாங்கூனுக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 105 பயணிகளும், 11 விமான ஊழியர்களும் இருந்தனர். பயணிகள் அனைவரும் கடலோர பகுதியில் வசிக்கும் ராணுவ குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஆவர். அந்த விமானம் அந்தமான் கடற்பகுதியில் மேற்கு தவேய் நகரை

சிங்கம் களமிறங்கிடுச்சேஏஏஏ… அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடுவது கன்பார்ம்

சென்னை: சூதாட்ட புகார் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கடந்த மற்றும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஆட தடை விதிக்கப்பட்டிருந்தது. இவ்விரு அணிகளும் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் களமிறங்க உள்ளன. எனவே இவ்விரு ஆண்டுகளும் ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட குஜராத் மற்றும் புனே அணிகள் அடுத்த ஆண்டுமுதல் விளையாடப்போவதில்லை. மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த ஆண்டு முதல் களமிறங்க உள்ள தகவலை அந்த அணிக்கான

எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் அரியலூர் மாணவி தற்கொலை..! l

அரியலூர் : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்பதால் கலைவாணி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.தேர்வின் முடிவில் தான் எதிர்பார்த்திருந்த மார்க் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் மாணவி கலைவாணி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வில் 94.4 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு தமிழகத்தில்மாணவிகளும், 90.6% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பயணியர் குறைத் தீர்க்க புதிய செயலி – அமைச்சர் சுரேஷ் பிரபு

குவஹாத்தி அஸ்ஸாம், அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கிடையேயான ரயில் பாதையை துவக்கி வைத்த அமைச்சர், புதிய அகலப் பாதைகளை அருணாச்சலப் பிரதேசத்தில் அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் நாகர்லாகுன் - குவஹாத்தி இடையிலான புதிய சதாப்தி ரயிலையும் துவக்கி வைத்தார். அப்போது பேசும் போது இந்திய ரயில்வே அதன் வளர்ச்சி திட்டங்களின் வேகத்தை முடுக்கி விட்டுள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் ரூ. 3.5 இலட்சம் கோடிகளை பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில்

டெல்லி டேர்டெவில்சையும் வீழ்த்தியது: மும்பை அணிக்கு 6-வது வெற்றி

மும்பை, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரங்கேறிய 25-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்சை எதிர்கொண்டது. டெல்லி அணியில் மூன்று மாற்றமாக சாம் பில்லிங்ஸ், மேத்யூஸ், ஜெயந்த் யாதவ் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக காஜிசோ ரபடா, கோரி ஆண்டர்சன், ஆதித்ய தாரே சேர்க்கப்பட்டனர். தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ரபடா ஐ.பி.எல்.-ல் ஆடுவது இதுவே முதல் முறையாகும். மும்பை அணியில் மலிங்கா கழற்றிவிடப்பட்டு,

ட்ரம்பின் படுக்கையறைக்கு அருகே மர்ம நபர்.. வெள்ளை மாளிகை அதிகாரிகளின் கவனக் குறைவா ?

வாஷிங்டன்(யு.எஸ்): கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெள்ளை மாளிகையில் மர்ம நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். தடுப்புக் கம்பி சுவர்களைத் தாண்டி, பல்வேறு பாதுகாப்பு வளையங்களையும் கடந்து ட்ரம்பின் படுக்கையறை இருக்கும் பகுதியில் கதவை திறக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார். கலிஃபோர்னியாவைச் சார்ந்த ஜானத்தன் ட்ரான் என்ற 26 வயது மர்ம நபர், மெயின் கேட்டைத் தாண்டி பதினைந்து நிமிடங்களுக்கு மேலாக யாரிடமும் பிடிபடாமல் வெள்ளை மாளிகையின் கதவுக்கருகே வந்து விட்டார். அதிபரின் பாதுகாப்பை

தமிழக விவசாயிகளுக்காக அமெரிக்காவில் தொடர்ந்து போராடும் தமிழர்கள்!

வாஷிங்டன்(யு.எஸ்): முன்னெப்போதும் காணாத அளவுக்கு அமெரிக்கத் தமிழர்களிடம் இன உணர்வும், தமிழக விவசாயிகள் மீதான அக்கறையும் காணப்படுகிறது. ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் நாட்டின மாடுகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும் அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டனர். இந்த போராட்டங்களுக்காக உள்ளூர் மட்ட அளவில் வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் குழுக்கள் உருவாக்கப் பட்டன. ஜல்லிக்கட்டு போராட்டங்கள் முடிவுக்கு வந்த பிறகு, அந்த குழுக்கள் தமிழக நலன்களுக்காக மாற்றி

லண்டன் தீவிரவாத தாக்குதல்.. பிரதமர் தெரசா பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டார்!

பிரிட்டன் பிரதமர் தெரசா மே பாதுகாப்பாக உள்ளார் என அந்நாட்டு பாதுகாப்ப அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லண்டன்: பிரிட்டன் பிரதமர் தெரசா மே பாதுகாப்பாக உள்ளார் என அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்துக்குள் உள்ள 400 எம்பிக்களும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்தின் வெளியே மர்மர நபர்கள் இன்று திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர்

Top