web
stats
View Visitor Stats பாஜக – VethaTV
You are here
Home > தேசிய > பாஜக

பயணியர் குறைத் தீர்க்க புதிய செயலி – அமைச்சர் சுரேஷ் பிரபு

குவஹாத்தி அஸ்ஸாம், அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கிடையேயான ரயில் பாதையை துவக்கி வைத்த அமைச்சர், புதிய அகலப் பாதைகளை அருணாச்சலப் பிரதேசத்தில் அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் நாகர்லாகுன் - குவஹாத்தி இடையிலான புதிய சதாப்தி ரயிலையும் துவக்கி வைத்தார். அப்போது பேசும் போது இந்திய ரயில்வே அதன் வளர்ச்சி திட்டங்களின் வேகத்தை முடுக்கி விட்டுள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் ரூ. 3.5 இலட்சம் கோடிகளை பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில்

பிரதமர் மோடிக்கு மாணவர் வேண்டுகோள்

புதுடெல்லி, சண்டிகாரில் தினசரி மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடக்கிறது. அதில் ஏராளமான மக்கள் மனு கொடுக்கின்றனர். அவற்றில் பெரும்பாலானவை நகைக்கும் விதமான செய்திகளை தாங்கி வருகிறது. சமீபத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிக்கும் மாணவர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு மனு கொடுத்தார். அந்த மாணவர் ஒரு நர்சை காதலிக்கிறார். இவர்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எனவே பிரதமர் மோடி இதில்

ஆட்சி மாற்றம் தேவை – அமித் ஷா

குமார்கட் (வடக்கு திரிபுரா) முதல்வர் மாணிக் சர்க்கார் மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக செலவழிக்கவில்லை. பல்வேறு திட்டங்களுக்காக மாநிலத்திற்கு இதுவரை ரூ. 35,000 கோடி அளித்துள்ளது. ஆனால் அவை முறையாக செலவழிக்கப்படவில்லை; இதனால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. அவர் மேலும் கூறுகையில், “முதல்வர் மாணிக் சர்க்கார் உட்பட பலரும் ரோஸ் பள்ளத்தாக்கு திட்ட முறைகேட்டில் சம்பந்தப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் எவ்வளவோ கேட்டும் சி பி ஐ விசாரணையை மாநில அரசு கோரவில்லை. “சி

அரசு மீது ரா.ஜ.த. மறைமுக கண்டனம்

பீகார் கட்சியின் பேரவை உறுப்பினரான ராமாநுஜ் பிரசாத் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்த நிலையில், ஐக்கிய ஜனதாதளத்தின் மாநில செய்தித்தொடர்பாளர் சஞ்சய் சிங், “இக்குற்றச்சாட்டு அடிப்படையற்றது. அவரது கட்சி அரசில் அங்கம் வகிக்கும் போது எப்படி அவரது தொலைபேசியை ஒட்டுக்கேட்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும் ரா.ஜ.த தலைவர்கள் சிலர் கூட்டணியில் பிரச்சினையை உருவாக்க முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். முகம்மது ஷஹாபுதினிடம் லாலு பேசும் உரையாடல் நேற்று தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. ஷஹாபுதின்

‘முத்தலாக்’ விவகாரத்தை அரசியல் ஆக்காதீர்கள் பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி, முத்தலாக் விவகாரம், நாடு முழுவதும் சல சலப்பை ஏற்படுத்தி வருகிறது. இஸ்லாமிய மதத்தை சேர்ந்த கணவர் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய விரும்பி, தொடர்ந்து 3 முறை ‘தலாக், தலாக், தலாக்’ என்று கூறிவிட்டால், மனைவியை பிரிந்து விடலாம் என்பது வழக்கத்தில் உள்ளது. ஒரே மூச்சில் முத்தலாக் சொல்வது மத ரீதியாக தடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சில மத அறிஞர்கள் ஒரே மூச்சில் ‘முத்தலாக்’ கூறலாம் என்றும் கூறுகிறார்கள். நடைமுறையில்

உ.பி.யில் விஐபி கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி: அகிலேஷ், மாயாவதியின் பாதுகாப்பை யோகி குறைத்தார்

லக்னோ, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், அக்கட்சியின் தலைவர்கள் ஷிவ்பால் யாதவ், அசாம் கான், டிம்பிள் யாதவ் மற்றும் ராம் கோபால் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோரின் பாதுகாப்பை உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் குறைத்துவிட்டார். இருப்பினும் பா.ஜனதா தலைவர் வினேய் காதியார்க்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. யோகி ஆதித்யநாத்திற்கு பயங்கரவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல்

Top