web
stats
View Visitor Stats சினிமா – VethaTV
You are here
Home > சினிமா

ஒல்லி உடம்பின் ரகசியம் என்ன?

அனுஷ்காவை விட, திரிஷா 7 கிலோ எடை குறைவாக இருக்கிறாராம். ஏறக்குறைய இரண்டு பேருக்கும் ஒரே வயதுதான். இருப்பினும் அனுஷ்கா பருமனாகவும், திரிஷா ஒல்லியாகவும் காணப்படுகிறார்கள். ஒல்லியான திரிஷாவை பருமனான அனுஷ்கா கொஞ்சம் பொறாமையுடன் பார்க்கிறாராம். ‘‘நீங்க சாப்பிடுறீங்களா இல்லை சாப்பிடுவதே இல்லையா? உங்க ஒல்லி உடம்பின் ரகசியம் என்ன? என்று கேட்டு, பெருமூச்சு விடுகிறாராம்!

மெர்சல் என்ற பெயரை விஜய் படத்துக்கு பயன்படுத்த ஐகோர்ட் தடை

சென்னை தெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் அட்லி இயக்கத்தில் மெர்சல் படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமாக மெர்சல் உருவாகியுள்ளது. இதில், முதன் முறையாக 3 வேடங்களில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். மேலும், வடிவேலு, சத்யன், சத்யராஜ், கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், எஸ்.ஜே.சூர்யா, சீனு மோகன், யோகி பாபு, மிஷா கோஷல்

புரியாத புதிர்

நடிகர்: விஜய் சேதுபதி நடிகை: காயத்திரி டைரக்ஷன்: ரஞ்சித் ஜெயக்கொடி இசை : ஷாம்.சி.எஸ். ஒளிப்பதிவு : தினேஷ்கிருஷ்ணன் கதையின் கரு: விளையாட்டாக எடுத்த ஒரு வீடியோ படம், வினையான விபரீதம். விஜய் சேதுபதி, காயத்ரி, மஹிமா நம்பியார் ஆகிய மூவரும் கல்லூரியில் படிக்கிறார்கள். செப்டம்பர் 02, 10:38 PM காயத்ரியும், மஹிமா நம்பியாரும் நெருக்கமான தோழிகள். ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். அப்போது மஹிமா நம்பியாரை, காயத்ரி விளையாட்டாக வீடியோ படம் எடுக்கிறார்.

அன்பானவன் அசராதவன் அடங்காதவன்

நடிகர்: சிம்பு நடிகை: ஸ்ரேயா, தமன்னா டைரக்ஷன்: ஆதிக் ரவிச்சந்திரன் இசை : யுவன் சங்கர்ராஜ ஒளிப்பதிவு : கிருஷ்ணன் வசந்த் சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா, சானா கான் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், நான்காவதாகவும் ஒரு வேடத்தில் நடித்து வருவதாக சிம்பு ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதனால்,

நடிகர் ரஜினிகாந்துடன் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் சந்திப்பு

.நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் சந்தித்து பேசினார். சென்னை நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் ரசிகர்களைச் சந்தித்தார். அப்போது அரசியல் குறித்து அவர் கூறிய கருத்துகளால் பரபரப்பு ஏற்பட்டது. ரஜினியின் அரசியல் கருத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் கலந்து வருகின்றன. இதனால், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ரஜினிகாத் தனது

மும்பையில் ரஜினிகாந்தின் ‘காலா’ படப்பிடிப்பு தொடங்கியது; நெல்லை தமிழ் பேசி நடித்தார்மும்பையில் ரஜினிகாந்தின் ‘காலா’ படப்பிடிப்பு தொடங்கியது; நெல்லை தமிழ் பேசி நடித்தார்

சென்னை, பா.ரஞ்சித் டைரக்‌ஷனில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்துக்கு ‘காலா’ என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இது ரஜினிகாந்தின் 164–வது படம் ஆகும். இந்த படத்தை நடிகர் தனுஷ் தனது வொண்டர்பார் பட நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். கதாநாயகியாக இந்தி நடிகை ஹூமா குரேஷி நடிக்கிறார். சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், ரவிகேளா, சயாஜி ஷிண்டே, பங்கஜ் திரிபாதி, அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ஈஸ்வரிராவ், அஞ்சலி பாட்டீல், சுகன்யா ஆகியோரும் நடிக்கின்றனர். சந்தோஷ்

மறுபடியும் அடிபட்டது!

‘ஆரம்பம்’ படப்பிடிப்பில் சண்டை காட்சியில் நடித்தபோது, அஜித்துக்கு கை– காலில் பலத்த அடிபட்டது. ‘ஆரம்பம்’ படப்பிடிப்பில் சண்டை காட்சியில் நடித்தபோது, அஜித்துக்கு கை– காலில் பலத்த அடிபட்டது. அதற்காக ‘ஆபரே‌ஷன்’ செய்து கொண்ட பின், அவர் குணம் அடைந்தார். சமீபத்தில், ‘விவேகம்’ படத்தின் சண்டை காட்சி பல்கேரியாவில் படமாக்கப்பட்டபோது, மீண்டும் அவருக்கு கையில் அடிபட்டது. படப்பிடிப்பை ரத்து செய்தால் தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் என்று அஜித் கருதியதால், சமாளித்துக் கொண்டு மீதமுள்ள

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிரடி மாற்றம்… விரைவில் அறிவிப்பு .

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மதிப்பெண் மாற்றமும், தேர்வு எழுதும் கால நேரம் மாற்றமும் விரைவில் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. சென்னை: 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பாடவாரியாக 200 மதிப்பெண்களிலிருந்து 100 மதிப்பெண்களாக குறைத்து பள்ளிக் கல்வித் துறை விரைவில் அறிவிக்கவுள்ளது. தமிழகத்தில் பொதுவாக 10 -ஆம் வகுப்பு வரை பாடவாரியாக 100 மதிப்பெண்கள் மட்டுமே இருக்கும். மொத்தம் 5 பாடங்களுக்கு தலா 100 மதிப்பெண்களாகும்.

ஜுன் 5 ஆம் தேதி வெளியாகவிருக்கும் வேலைக்காரன் ஃபர்ஸ்ட் லுக்!

சிவகார்த்திகேயன், நயன் தாரா, ஃபகத் பாசில் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் வேலைக்காரன். தனி ஒருவன் ஹிட்டுக்குப் பிறகு மோகன் ராஜா இயக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. வேலைக்காரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மே 1 அன்று வெளியிடப்படும் என்று செய்தி வந்தது. ஆனால் அன்று எந்த ஃபர்ஸ்ட் லுக்கும் வரவில்லை. கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடியும் சமயத்துக்கே வந்துவிட்டது. எனவே இப்போது ஃபர்ஸ்ட் லுக் விடலாம்

அரசியலுக்கு ரஜினி வந்து பார்த்தாதான் தெரியும் அது எவ்வளவு கஷ்டம்னு! – இது ஓபிஎஸ் அணி கருத்து

அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி பொதுச்செயலாளர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ளார். அவருடன் சென்றுள்ள அவரது அணியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான கே.பி.முனுசாமி ரஜினியின் அரசியல் பிரவேச பேச்சு குறித்து கருத்து கூறுகையில், "இன்று ரஜினிகாந்த் தமிழக அரசியல் பற்றி பேசி இருக்கிறார். ஒரு வார்த்தை பேசியதற்கே அவரால் தாங்க முடியவில்லை. அவர் அரசியலுக்கு வந்து பார்க்கட்டும். இங்கு எவ்வளவு சோதனைகள் ஏச்சுகள், பேச்சுகள் எப்படி இருக்கும் என்பதை அவர் வந்து

Top