web
stats
View Visitor Stats அந்தமான் கடற்பகுதியில் 116 பேருடன் சென்ற மியான்மர் ராணுவ அந்தமான் கடற்பகுதியில் 116 பேருடன் சென்ற மியான்மர் ராணுவ விமானத்தின் உடைந்த பாகங்கள், சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. – VethaTV
You are here
Home > உலக செய்திகள் > அந்தமான் கடற்பகுதியில் 116 பேருடன் சென்ற மியான்மர் ராணுவ அந்தமான் கடற்பகுதியில் 116 பேருடன் சென்ற மியான்மர் ராணுவ விமானத்தின் உடைந்த பாகங்கள், சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

அந்தமான் கடற்பகுதியில் 116 பேருடன் சென்ற மியான்மர் ராணுவ அந்தமான் கடற்பகுதியில் 116 பேருடன் சென்ற மியான்மர் ராணுவ விமானத்தின் உடைந்த பாகங்கள், சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

யாங்கூன்,

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில், ராணுவ விமானம் ஒன்று இந்திய நேரப்படி நேற்று மதியம் 2 மணி அளவில் தெற்கு கடலோர பகுதி நகரான மெய்க்கில் இருந்து மியான்மரின் மிகப்பெரிய நகரான யாங்கூனுக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 105 பயணிகளும், 11 விமான ஊழியர்களும் இருந்தனர். பயணிகள் அனைவரும் கடலோர பகுதியில் வசிக்கும் ராணுவ குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
அந்த விமானம் அந்தமான் கடற்பகுதியில் மேற்கு தவேய் நகரை நெருங்கி பறந்து கொண்டிருந்தபோது மாயமானது.

விமானத்துடன் இருந்த ரேடார் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. அதன்பிறகு அந்த விமானம் எங்கே சென்றது என்பதும், அதில் இருந்தவர்களின் கதி என்ன ஆனது என்பது பற்றியும் உடனடியாக எந்த தகவலும் தெரியவரவில்லை. இதுபற்றி மியான்மர் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ராணுவ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருக்கும் என்று சந்தேகிக்கிறோம். ஏனென்றால் அந்த பகுதியில் வானிலை நிலை நன்றாகவே இருந்தது. இதனால் மோசமான வானிலை காரணமாக விமானம் மாயமாவதற்கு வாய்ப்பில்லை’’ என்றார்.

மாயமான விமானத்தை தேடும் பணியில் கப்பல்களும், ராணுவ விமானங்களும் தீவிரமாக ஈடுபட்டது. அந்தமான் கடற்பகுதியில் மாயமான விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது, சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என அந்நாட்டு ராணுவம் தெரிவித்து உள்ளது. தெற்கு மியான்மர் பகுதியில் உள்ள லங்க்லோன் கடற்பகுதியில் விமானத்தின் சிதைவு பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இன்று காலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட விமானங்கள் மற்றும் கப்பல்கள் கண்டுபிடித்து உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

admin
பொது செய்திகள்,சினிமா செய்திகள்,கல்வி செய்திகள், பேட்டிகள்,மக்கள் குறைகள், என சமுதாயத்தை நோக்கிய உங்கள் சேவைகளுக்காக இந்த நிறுவனம்.
http://www.vethatv.com
Top