web
stats
View Visitor Stats ‘முத்தலாக்’ விவகாரத்தை அரசியல் ஆக்காதீர்கள் பிரதமர் மோடி வேண்டுகோள் – VethaTV
You are here
Home > அரசியல் > ‘முத்தலாக்’ விவகாரத்தை அரசியல் ஆக்காதீர்கள் பிரதமர் மோடி வேண்டுகோள்

‘முத்தலாக்’ விவகாரத்தை அரசியல் ஆக்காதீர்கள் பிரதமர் மோடி வேண்டுகோள்


புதுடெல்லி,

முத்தலாக் விவகாரம், நாடு முழுவதும் சல சலப்பை ஏற்படுத்தி வருகிறது. இஸ்லாமிய மதத்தை சேர்ந்த கணவர் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய விரும்பி, தொடர்ந்து 3 முறை ‘தலாக், தலாக், தலாக்’ என்று கூறிவிட்டால், மனைவியை பிரிந்து விடலாம் என்பது வழக்கத்தில் உள்ளது. ஒரே மூச்சில் முத்தலாக் சொல்வது மத ரீதியாக தடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சில மத அறிஞர்கள் ஒரே மூச்சில் ‘முத்தலாக்’ கூறலாம் என்றும் கூறுகிறார்கள்.

நடைமுறையில் உள்ள ‘முத்தலாக்’ முறைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சாயரா பானு என்ற பெண்ணும், மற்றும் பலரும் வழக்கு தொடுத்துள்ளனர். இது அரசியல் சாசன அமர்வின் விசாரணையில் உள்ளது.

‘நீதி கிடைக்க வேண்டும்’

இந்த ‘முத்தலாக்’ முறைக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் ‘ஷரியத்’ என்னும் மதச்சட்டத்தில் கை வைத்து ‘முத்தலாக்’ முறையையே ஒழித்துக்கட்ட மத்திய அரசு முயற்சிப்பதாக ஒரு தரப்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆனால் கடந்த மாதம் 16-ந்தேதி ஒடிசா மாநிலம், புவனேசுவரத்தில் நடந்த பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “நமது முஸ்லிம் சகோதரிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். அநீதி கூடாது” என வலியுறுத்தி கூறினார்.

‘அரசியல் கோணம் வேண்டாம்’

இந்த நிலையில் 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கன்னட தத்துவ மேதை பசவேஸ்வரய்யாவை நினைவுகூர்ந்து டெல்லியில் நேற்று நடந்த பசவ ஜெயந்தி கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார்.

அதில் அவர் மீண்டும் இந்த ‘முத்தலாக்’ விவகாரத்தை கையில் எடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசியல் கோணத்தில் முத்தலாக் விவகாரத்தை பார்க்க வேண்டாம். எல்லோரும் இணைந்து இதற்கு ஒரு தீர்வைக் காணலாம். அந்த தீர்வு, மேன்மையானதாக, இனி வரும் தலைமுறைகளும் உங்களை நினைவுகூர்வதாக அமைய வேண்டும்.

அறிவார்ந்த மக்கள் தோன்றுவர்

அறிவார்ந்த மக்கள், முஸ்லிம் சமூகத்தில் தோன்றுவார்கள்; அவர்கள் காலாவதியான இந்த வழக்கங் களை ஒழித்துக்கட்டுவார்கள்; நவீன வழக்கங் களை உருவாக்குவார்கள் என்று நான் நம்புகிறேன்.

நமது முஸ்லிம் சமூகத்தினர், உலகளாவிய முஸ்லிம் சமூகத்தினருக்கு நவீனயுக பாதையை காட்ட வேண்டும். அதுதான் வலிமை. அதுதான் சக்தி. அதைத்தான் இந்த நாடு நம் அனைவருக்கும் தந்திருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

admin
பொது செய்திகள்,சினிமா செய்திகள்,கல்வி செய்திகள், பேட்டிகள்,மக்கள் குறைகள், என சமுதாயத்தை நோக்கிய உங்கள் சேவைகளுக்காக இந்த நிறுவனம்.
http://www.vethatv.com
Top