web
stats
View Visitor Stats அன்பானவன் அசராதவன் அடங்காதவன் – VethaTV
You are here
Home > சினிமா > கோலிவூட் > அன்பானவன் அசராதவன் அடங்காதவன்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன்

நடிகர்: சிம்பு நடிகை: ஸ்ரேயா, தமன்னா டைரக்ஷன்: ஆதிக் ரவிச்சந்திரன் இசை : யுவன் சங்கர்ராஜ ஒளிப்பதிவு : கிருஷ்ணன் வசந்த்

சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா, சானா கான் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், நான்காவதாகவும் ஒரு வேடத்தில் நடித்து வருவதாக சிம்பு ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதனால், நாளுக்கு நாள் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது படக்குழுவினர் மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். அதாவது, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ இரண்டு பாகங்களாக வெளிவரவிருக்கிறதாம். ‘பாகுபலி’ பாணியில் ஒரு பாகத்தின் தொடர்ச்சி அடுத்த பாகத்திலும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

சிம்பு ரசிகர்களுக்கு உண்மையிலேயே இந்த செய்தி இரட்டை விருந்தாகத்தான் இருக்கும். ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் டீசர்கள் ஏற்கெனவ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. யுவன் இசையமைப்பில் உருவாகியிருக்கும் பாடல்களை விரைவில் வெளியிடவுள்ளனர்.

admin
பொது செய்திகள்,சினிமா செய்திகள்,கல்வி செய்திகள், பேட்டிகள்,மக்கள் குறைகள், என சமுதாயத்தை நோக்கிய உங்கள் சேவைகளுக்காக இந்த நிறுவனம்.
http://www.vethatv.com
Top