web
stats
View Visitor Stats நடிகர் ரஜினிகாந்துடன் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் சந்திப்பு – VethaTV
You are here
Home > சினிமா > கோலிவூட் > நடிகர் ரஜினிகாந்துடன் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்துடன் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் சந்திப்பு

.நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் சந்தித்து பேசினார்.

சென்னை

நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் ரசிகர்களைச் சந்தித்தார். அப்போது அரசியல் குறித்து அவர் கூறிய கருத்துகளால் பரபரப்பு ஏற்பட்டது. ரஜினியின் அரசியல் கருத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் கலந்து வருகின்றன. இதனால், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் ரஜினிகாத் தனது புதிய படமான காலா படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து திரும்பி உள்ளார். இதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள். முக்கிய பிரமுகர்கள் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, தமிழருவி மணியன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் ரஜினியைச் சந்தித்தனர்.

நடிகர் ரஜினிகாந்தை நேற்று அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் சந்தித்து பேசினார்கள். பிரதமரிடம் ரூ.1 கோடி கொடுத்து நதிகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற ஆவன செய்யும்படி வற்புறுத்தினார்கள்.

இன்று போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் சந்தித்தார். ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அர்ஜூன் சம்பத்துடன் இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் இராம.இரவிக்குமார், இளைஞரணி மாநில பொதுச் செயலாளர், குருமூர்த்தி உள்ளிட்டோர் ரஜினியைச் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-

அர்ஜூன் சம்பத், “ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அரசியலுக்கு வருவது குறித்து ஆலோசித்து வருவதாக ரஜினி கூறினார். அதற்கான ஏற்பாடுகளை ரஜினி செய்து வருகிறார். நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே ரஜினியின் எண்ணம். ரஜினி சிங்கமாக, சிங்கிளாக அரசியலுக்கு வருவார். அவரது தலைமையில் கூட்டணி அமைத்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அவரை பி.ஜே.பி இயக்கவில்லை” இவ்வாறு அவர் கூறினார்.

admin
பொது செய்திகள்,சினிமா செய்திகள்,கல்வி செய்திகள், பேட்டிகள்,மக்கள் குறைகள், என சமுதாயத்தை நோக்கிய உங்கள் சேவைகளுக்காக இந்த நிறுவனம்.
http://www.vethatv.com
Top