web
stats
View Visitor Stats காஷ்மீர் சோதனை சாவடியில் ராணுவம் – போலீஸ் இடையே மோதல், போலீஸ் வழக்குப்பதிவு – VethaTV
You are here
Home > உலக செய்திகள் > காஷ்மீர் சோதனை சாவடியில் ராணுவம் – போலீஸ் இடையே மோதல், போலீஸ் வழக்குப்பதிவு

காஷ்மீர் சோதனை சாவடியில் ராணுவம் – போலீஸ் இடையே மோதல், போலீஸ் வழக்குப்பதிவு

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளால் தூண்டிவிடப்படும் கல் வீச்சாளர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். மாநிலத்தில் அமைதியின்மை அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ராணுவம் மற்றும் போலீஸ் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் சோதனை சாவடியில் ராணுவம் மற்றும் அம்மாநில போலீஸ் இடையே இன்று மோதல் வெடித்து உள்ளது. இருதரப்பு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்து உள்ளது.

இதில் அம்மாநில போலீசார் 6 பேர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் ஏஎன்ஐயில் வெளியாகி உள்ளது. சோதனை சாவடியில் ராணுவ அதிகாரிகள் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

போலீஸ் தரவுகளை அழித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநில போலீஸ் வழக்குப்பதிவு செய்து உள்ளது.

admin
பொது செய்திகள்,சினிமா செய்திகள்,கல்வி செய்திகள், பேட்டிகள்,மக்கள் குறைகள், என சமுதாயத்தை நோக்கிய உங்கள் சேவைகளுக்காக இந்த நிறுவனம்.
http://www.vethatv.com
Top