web
stats
View Visitor Stats உ.பி.யில் விஐபி கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி: அகிலேஷ், மாயாவதியின் பாதுகாப்பை யோகி குறைத்தார் – VethaTV
You are here
Home > Uncategorized > உ.பி.யில் விஐபி கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி: அகிலேஷ், மாயாவதியின் பாதுகாப்பை யோகி குறைத்தார்

உ.பி.யில் விஐபி கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி: அகிலேஷ், மாயாவதியின் பாதுகாப்பை யோகி குறைத்தார்

லக்னோ,

சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், அக்கட்சியின் தலைவர்கள் ஷிவ்பால் யாதவ், அசாம் கான், டிம்பிள் யாதவ் மற்றும் ராம் கோபால் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோரின் பாதுகாப்பை உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் குறைத்துவிட்டார். இருப்பினும் பா.ஜனதா தலைவர் வினேய் காதியார்க்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. யோகி ஆதித்யநாத்திற்கு பயங்கரவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக அவருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. நேற்று சனிக்கிழமை உ.பி. புதிய டிஜிபி சுல்கான் சிங் உளவுத்துறை மற்றும் உள்துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திஉள்ளார், இதனையடுத்து எடுக்கப்பட்ட இம்முடிவானது நேற்றே அமலுக்கு வந்தது.

இதுவரையில் உத்தரபிரதேச மாநில யோகி ஆதித்யநாத் அரசு 46 விஐபிகளின் பாதுகாப்பை குறைத்து உள்ளது. மற்றும் 105 விஐபிகளுக்கான பாதுகாப்பை முற்றிலுமாக நிறுத்திவிட்டது. முழு பாதுகாப்பை இழந்தவர்கள் பட்டியலில் பகுஜன் சமாஜ் கட்சியின் பொது செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சதிஷ் சந்திரா மிஸ்ராவும் அடங்குவார். மத்திய அரசு விபிஐ கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கார்களில் வைக்கப்படும் சிகப்பு சுழல் விளக்கை அகற்ற உத்தரவிட்டது, இதன் தொடர்ச்சி நடவடிக்கையில் உபி அரசும் இறங்கிஉள்ளது.

admin
பொது செய்திகள்,சினிமா செய்திகள்,கல்வி செய்திகள், பேட்டிகள்,மக்கள் குறைகள், என சமுதாயத்தை நோக்கிய உங்கள் சேவைகளுக்காக இந்த நிறுவனம்.
http://www.vethatv.com
Top