web
stats
View Visitor Stats ஆட்சி மாற்றம் தேவை – அமித் ஷா – VethaTV
You are here
Home > அரசியல் > ஆட்சி மாற்றம் தேவை – அமித் ஷா

ஆட்சி மாற்றம் தேவை – அமித் ஷா

குமார்கட் (வடக்கு திரிபுரா)

முதல்வர் மாணிக் சர்க்கார் மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக செலவழிக்கவில்லை. பல்வேறு திட்டங்களுக்காக மாநிலத்திற்கு இதுவரை ரூ. 35,000 கோடி அளித்துள்ளது. ஆனால் அவை முறையாக செலவழிக்கப்படவில்லை; இதனால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. அவர் மேலும் கூறுகையில், “முதல்வர் மாணிக் சர்க்கார் உட்பட பலரும் ரோஸ் பள்ளத்தாக்கு திட்ட முறைகேட்டில் சம்பந்தப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் எவ்வளவோ கேட்டும் சி பி ஐ விசாரணையை மாநில அரசு கோரவில்லை. “சி பி ஐ விசாரணையை நீதிமன்றமோ அல்லது மாநில அரசோ மட்டுமே கோர முடியும். மாணிக் சர்க்கார் தான் அந்த ஊழலில் ஈடுபடவில்லை என்றால் சி பி ஐ விசாரணையை கோரட்டுமே” என்றார் ஷா. இந்த ஊழலில் ரூ. 10,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த தேர்தலில் சிபிஎம் கட்சியை தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து 25 வருட ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம் என்றார் அமித் ஷா. சிபிஎம் பழங்குடியினர், பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் தவறான நிர்வாகத்தால் அவதிப்படுகின்றனர். ஆனால் அக்கட்சி பழங்குடியினரின் நன்மைக்காகவே இயங்குவதாக கூறிக்கொள்கிறது. மத்திய அரசு நிதியளித்தாலும் மாநில மக்கள் அடிப்படை வசதிகளை பெறவில்லை. மாநில அரசு ஊழியர்கள் நான்காவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படியே சம்பளம் பெறுகின்றனர். ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி சம்பளம் வழங்கப்படும் என்றார் அமித் ஷா.

admin
பொது செய்திகள்,சினிமா செய்திகள்,கல்வி செய்திகள், பேட்டிகள்,மக்கள் குறைகள், என சமுதாயத்தை நோக்கிய உங்கள் சேவைகளுக்காக இந்த நிறுவனம்.
http://www.vethatv.com
Top