web
stats
View Visitor Stats கன்னியாகுமரி மாவட்டம் ஆலஞ்சோலை பகுதியில் பகுதியில் தொடர் திருட்டு திருடி விட்டு தடயங்களை அளிக்க வீ்ட்டை. தீகொளுத்தி விட்டு மிளகாய் பொடி தூவி சென்ற பெண் கண்காணிப்பு காமிரா பதிவுகளை கொண்டு திருடிய பெண்ணை பிடித்து கடையாலுமூடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் – VethaTV
You are here
Home > பொது செய்திகள் > கன்னியாகுமரி மாவட்டம் ஆலஞ்சோலை பகுதியில் பகுதியில் தொடர் திருட்டு திருடி விட்டு தடயங்களை அளிக்க வீ்ட்டை. தீகொளுத்தி விட்டு மிளகாய் பொடி தூவி சென்ற பெண் கண்காணிப்பு காமிரா பதிவுகளை கொண்டு திருடிய பெண்ணை பிடித்து கடையாலுமூடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

கன்னியாகுமரி மாவட்டம் ஆலஞ்சோலை பகுதியில் பகுதியில் தொடர் திருட்டு திருடி விட்டு தடயங்களை அளிக்க வீ்ட்டை. தீகொளுத்தி விட்டு மிளகாய் பொடி தூவி சென்ற பெண் கண்காணிப்பு காமிரா பதிவுகளை கொண்டு திருடிய பெண்ணை பிடித்து கடையாலுமூடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

குமரிமாவட்டம் களியல் அருகே ஆலஞ்சோலை பீலிக்கோடு பகுதியில் வசித்து வருபவர் அருள்தாஸ். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இதனால் இவரது மனைவி சோபாபிளாறன்ஸ் அவரது இரு குழந்தைகளுடன் தனிமையாக வசித்து வருகிறார். இந்த நிலையில் சில மாதங்களாக இவரது வீட்டில் இருக்கும் பல வில மதிப்புள்ள பொருட்கள் மற்றும் நகைகள் காணாமல் போவதால் சந்தேகமடைந்த
சோபாபிளாறன்ஸ் இந்த தகவலை அவரது கணவரிடம் கூறியுள்ளார். இதை தொடர்ந்து அவரது கணவனார் கூறியதன் படி 15- நாட்களுக்கு முன்பு வீட்டுக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று காலையில் சோபாபிளாறன்ஸ் அவரது இரு குழந்தைகளுடன் சர்ச்சுக்கு சென்ற நேரத்தில் அவரது வீட்டில் இருந்து புகைமூட்டம் வருவதை பார்த்த பக்கத்து வீட்டார் குலசேகரம் தீ அணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்து விட்டு சோபாபிளாறன்ஸ்க்கும் தகவல் தெருவிக்கப்பட்டது. இதன் பிறகு தீ அணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்துவிட்டு பார்த்த போது மிளகாய் பொடி சிந்தி கிடந்தது மேலும் வீட்டில் இரண்டாயிரம் ரூபாய் மாயமாகி இருந்தது இதனால் வீட்டில் பொருத்தியிருந்த கேமராவில் பதிவான காட்சிகளை பரிசோதித்தபோது அவரது வீட்டின் அருகில் வசித்துவரும் பாசில்லா (38) என்ற பெண் வீட்டுக்குள் புகுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த 2000- ரூபாவை திருடுவதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து சோபாபிளாறன்ஸ் களியல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து போலீசார் பாசில்லாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தகவல் தெரிந்ததும் ஆலஞ்சோலையில் உள்ள பலர் அவர்களுக்கும் பல்வேறு பொருட்கள் திருட்டு போனதாக காவல்நிலையத்தில் புகார் தெருவித்து வருகின்றனர். இதுகுறித்து சோபாபிளாறன்ஸ் கூறியதாவது எனது கணவனாரின் தாயார் உடல் நலக்குறைவாக இருந்த நேரத்தில் உதவிக்காக 100- சம்பளத்திர்க்கு வேலை பார்க்க வந்த நேரத்தில் வீட்டின் ஒரு சாவி காணாமல் போனதாகவும் அந்த சாவியை வைத்து இதுவரையிலும் 6- பவன் நகையும் திருடியிருப்பதாக கூறியுள்ளார். என்று தெரிவித்தார்
பாசில்லா திருடி விட்டு கண்காணிப்பு காமிரா இருப்பதை பார்த்து பயந்து பதிவுகளை அளிக்க வீட்டை தீகொளுத்தி விட்டு மோப்பநாய் க்கு பயந்து மிளகாய் பொடி தூவி சென்றதாக போலீஸ் விசாரணையின்போது திருடிய பாசிலா தெரிவித்து உள்ளார்

admin
பொது செய்திகள்,சினிமா செய்திகள்,கல்வி செய்திகள், பேட்டிகள்,மக்கள் குறைகள், என சமுதாயத்தை நோக்கிய உங்கள் சேவைகளுக்காக இந்த நிறுவனம்.
http://www.vethatv.com
Top